Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மாதாந்த இஜ்திமா ஒன்றுகூடல் - ஜெர்மனி…!


ஜெர்மனி ஹில்புரோன் மண்ணில் நேற்றைய தினம் மாதாந்த இஜ்திமா ஒன்றுகூடல் நடைபெற்றது.

மாதந்த இஜ்திமா ஒன்றுகூடலானது மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வகையில் நேற்றைய தினம் மௌலவி. அஷ்-சேக் எஸ்.எம்.ஜாசிர் தலைமையில் ஹில்புரோன்-குண்டெல்ஷிம் பள்ளிவாசலில்  ஆரம்பமானது.

குறிப்பாக இந்த ஒன்று கூடளுக்கு சிறப்பு மார்க்க சொற்பொழிவு வழங்குவதற்காக வருகை தந்த அர்-ரப்பானிய்யா ஹதீஸ் கலை உயர் கற்கை பீடத்தின் அதிபரும், பாதிமா பெண்கள் அரபுக் கல்லூரி நிந்தவூர், உபை இப்னு கஅப் ஆண்கள் மதரசா நிந்தவூர் மற்றும் ஆயிஷா சித்தீகா பெண்கள் அரபுக் கல்லூரி சம்மாந்துறை, போன்ற மதரஸாக்களின் அதிபராகவும் கடமையாற்றி இன்று முழு உலகளாவிய ரீதியில் குர்ஆனுடைய தப்ஸீர் பாடத்தினை நடத்திக் கொண்டும், முழு உலகளாவிய ரீதியில் மக்களுக்கு மத்தியில் இந்த குர்ஆன் இதனுடைய விளக்கம் போய் சேர வேண்டும் என்ற பெரும் ஒரு நன்நோக்கத்தோடு நம் சமூகத்துக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும் கண்ணியத்திற்கும் மதிப்புக்கும் உரிய மௌலவி. அஷ்-சேக். அல் ஹாபில் அலி அஹ்மத் ரஷாதி ஹஸ்ரத் அவர்களுக்கு ஜெர்மனி அர்-ரப்பானியா நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

அத்தோடு இந்த நிகழ்வுக்காக பல தூரங்களுக்கு மத்தியிலும் சிரமங்கள் பாராது கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலிகளை வழங்க வேண்டும் என்று கூறி நம் எல்லோருடைய முயற்சிகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு அதற்குரிய கூலிகளை நமக்கு வழங்குவானாக என்று தெரிவித்துகொள்கின்றார் நிகழ்வு ஏட்பட்டுக்குழுவினர்.

மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக சென்ற Star Radio Network (முஸ்லிம் வானொலி) நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல். நௌபர் மற்றும் வானொலியின் ஜெர்மனி விரிவாக்கல் குள்வினர்களான முஹம்மது அஸ்கர், முஹம்மது அஸ்லம். ஷெரிப் சுஹைப் மற்றும் பலரோடு நிகழ்ச்சியை அறிவிப்பாளர் ஷாஹிர் கான் தொகுத்து வழங்கினார்.






பாத்திமா-இஹானா 
முஸ்லிம் வானொலி

Post a Comment

0 Comments