Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஃதிகாபின் சிறப்புகள்...!



பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தலே இஃதிகாப் என்பதாகும். இது ஒரு சுன்னாத்தான அமலாகும்.குறிப்பாக ரமழான் மாத்தில் அதிகூடிய முக்கியத்துவம் செலுத்தப்பட வேண்டிய ஒரு வணக்கமாகும். நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் அலை அவர்களும் இஃதிகாப் என்ற வணக்க வழிபாட்டை கடைப்பிடித்து வந்த

செய்தியை அல்குர்ஆன் ஸுரா பகராவில் 125ம் வசனம் கூறுகிறது. அவ்வாறே மர்யம் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஃதிகாப் இருந்த வரலாற்றை ஸுரா ஆல-இம்ரான் கூறுகிறது. எனவே இஃதிகாப் என்பது முன்னைய நபிமார்கள் காலத்தில் இருந்து தொண்டுதொட்டு வழிபட்டு வந்த ஒரு வணக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இஃதிகாபின் சிறப்புகள்:

ரமழான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
(ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள்

இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்: புகாரி)

(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

முஹம்மத் பகீஹுத்தீன்

Post a Comment

0 Comments